Tuesday, February 22, 2005

சிறுவர்கள் சிறுமியர்களை ஏமாற்றும் திரைப்படம்

மன்மதன்

"LITTLE SUPER STAR" சிம்புவால் நடிக்கப்பட்ட படம் என்று கூறி திரைவிமர்சனம் காட்டப்பட்ட பின் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் அந்தப்படத்தைக் கண்டுவிட்டு அந்தப் படம் கடையில் வந்தவுடன் வாங்கி கண்கொள்ளாக் காட்சிபோல் பார்த்துக்கொண்டுடிருப்பார்கள். அவர்களுக்கு அந்தப் படத்தின் அர்த்தம் இன்னும் விளங்கவில்லை. அது ஒரு சுப்பர் படம் என்று நினைப்பார்கள். நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். என்னோடு கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்கள் சில பேர் அந்தப் படத்தை விரும்பவில்லைத்தான். ஆனால் எனக்குத் தெரிந்த பலர் அந்தப் படத்தை விரும்பினார்கள். விரும்பிப் பார்த்தார்கள். பல பெரியவர்கள் கூறினார்கள். "மன்மதன் தப்பு செய்த பொம்பளைகளைத் தானே கொல்லுகிறான். அவன் அவர்களைக் கொல்லுவதில் தப்பில்லை. கொல்லட்டுமே." என்று. அதற்குப்பின் தான் நான் அப்படத்தை வாங்கிப் பார்த்தேன். அந்தப்படம் ஒரு சராசரிப்படமாகவே எனக்கும் தோன்றியது. ஆனால் விசயம் வேறுவிதமாகப் போய்விட்டது. என் அப்பா அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு "எப்படி ஒரு மோசமான படம் எடுத்திருக்கின்றார்கள்." என்று எனக்கு விளங்கப்படுத்தினார். அதன் பின்னர் தான் எனக்கு புரிந்தது. அதற்குபின் தான் நான் ஒரு விமர்சனமாக மன்மதன் பற்றி எழுதினேன். அந்தப் படத்தைப்பற்றி நிருபாவிடமும் கதைத்து நிருபாவின் உதவிமூலம் தான் நான் புளொக்கில் போட்டேன். ஒன்று மட்டும் உறுதியாக இருக்கின்றது. மன்மதன் என்னும் படம் சிம்பு நடிக்காமலிருந்தால் இந்தப் படத்தை ஒரு நாயும் விரும்பிப் பார்த்திருக்க மாட்டாது.

-செந்தூரன்
21.02.2005

பி.கு.
இது செந்தூரன் தமிழிலேயே எழுதியது. முதல் தான் எழுதிய விடயத்திற்கு மற்றவர்களால் எழுதப்பட்ட கருத்துக்களை தான் வாசித்ததென்றும் படிப்பு விடயங்களில் தான் கவனம் செலுத்தவேண்டியிருப்பதால் நேரமில்லையென்றும் நேரம் கிடைக்கிறபோது அவர்களுக்கு எழுதுவதாகவும் செந்தூரன் சொல்கிறார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, February 19, 2005

புதுயுகம் படைப்போம்

சுனாமி

ஆழிப் பேரலையே
அடித்ததென்ன எங்களையும்

சுனாமி எனும் பெயர்கொண்டு
பூமியில் பாதியை அழித்ததென்ன

சிக்கிவிட்ட சில்லறைபோல்
சிதறியதே சிந்தனைகள்

கொண்டுவந்த சுமைகளை
சுழுக்கெடுத்துவிட்டாய்

அப்போது எம் வேதனை தெரியவில்லையா?
இப்போது உன் கொடுமை புரியவில்லையா?

சுனாமிப் பேரலையே
சுற்றத்தைக் கொன்றதுமேன்

ஓங்கி அலையடித்து
ஊரை அழித்ததுமேன்

உறக்கம் கலையுமுன்னே
மக்கள் உயிரைப் பறித்ததுமேன்

பச்சைப் பாலகர்கள் செய்த
பாவமென்ன சொல்லு

மிச்சமேதுமின்றி
குடும்பங்கள் மறைந்தனவே

பேயாக வந்த கடலலையால்
பிணமானோம்

ஆற்ற முடியவில்லை - மனம்
ஆறாத் துயரில்
மறக்க முடியவில்லை - இன்னும்
ஈர நினைவுகள்

(நிசாந்தனின் மறைவை நினைத்து எழுதியது)

- சதீஸ்காந்தன்
(வகுப்பு 8, கதிரொளி சிறுவர் இல்லம்)
01/2005
புதுயுகம் படைப்போம்

தலை குனிந்து வாழ்ந்த பேதையை
அடக்கமெனும் ஆயுதம் கொண்டு
அடக்கிவிட்டனர் !

அன்புக்கு அடிபணிந்த மடந்தையை
அடிமைச் சங்கிலி கொண்டு
பூட்டிவிட்டனர் !

இரக்கத்திற்கு மயங்கிய பேதையை
பரிவு எனும் தடவலினால்
தட்டிவிட்டனர் !

மலர்களாய் மணம் பரப்பிய மங்கையை
மலர் நுகரும் வண்டுகளால்
அழித்துவிட்டனர் !

பூமாதேவியாய் பொறுமை காத்த பெண்களோ
கல்லறைகளுக்கு காவலாகிவிட்டனர் !

கவிதைக்கு அழகு சேர்த்த கன்னியோ
கல்யாணச் சிறைக்குள் கைதியாக்கப்பட்டனள் !

இவ்வாறு-

பெண்களின் தன்மையை
பெண்மை என்ற பெயரில்
தரம் தாழ்த்திய சமுதாயத்தை
புறம் தள்ளி
புறப்படு பெண்ணே

புது யுகம் படைத்து
அடிமைகளாக மாண்ட
மடந்தைகளின் கல்லறைகளை
முற்றுகையிடுவோம்.

- விமலசாந்தி (வகுப்பு 9)
(யோகசுவாமி மகளிர் இல்லம்)
பூவிடம் கேட்பேன்

பூவே!
மலர்ந்து வண்டுக்கு
அமிர்தம் கொடுப்பாயா?

சூரியனைக் கண்டு
பூவே சிரிப்பாயா?

தென்றல் காற்றில்
குதூகலமாய் ஆவாயா?

தேனருந்தும் வண்டுகளை
வாவென்று அழைப்பாயா?

பூவே!
எனது அப்பா அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?- விஸ்ணுகாந்தன் (வகுப்பு 8)
(விபுலானந்தா சிறுவர் இல்லம்)நன்றி: துளிர்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பெண்களை அவமதித்தாய்….!"Die Leute und Kinder sehen den Film und sagen, dass der ein super Film ist. Aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in dem Film drin ist.“
~ Senthuran, 12 Jahre alt.

"இந்தப் படத்தினைப் பார்த்து சனங்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.“
- செந்தூரன், வயது 12 (சில வருடங்களாக ஜேர்மனியில் வசித்துவருகின்றார்.)Manmathan

Ich hasse diesen Film. „Manmathan“ heißt in Tamilisch, etwa „Play Bay“. In diesem Film geht es um einen Kriminalist, der in Universität lernt und gut die Frauen anziehen kann und dann vergewaltig die Frauen und bringt anschließend um.

Das schlimmste ist, er vergewaltigt und tötet die nur, weil sein kleinen Bruder von so einem Fall sehr betroffen worden war. Er wurde von einer Freundin betrogen. Er brachte seine Freundin um und der Junge, der mit ihr geschlafen hatte, auch um. Dann ging er zu seinem Bruder und erzählt alles und bracht er sich selbst um. Und als der große Bruder das sah platzte bei dem der Gehirnzelle und er brachte alle Frauen um, die Männer betrügen.

Er tötete immer mehr Frauen und irgendwann schnappte die Polizei ihn und erzählte alles was geschah aber zuletzt sagte er das sein Bruder alle Frauen getötet hat und nicht er.
Dann glaubten die Polizisten ihn 100 % und ließen ihn frei und er wollte trotzdem weiter machen. Der Kriminalist wollte immer noch betrügende Frauen unbedingt und herzlos weiter jagen.

Er meinte auch sehr streng, dass der Gott in seiner Seite steht und ihm hilft.

Meinung:

Er hat kein Recht so viele Junge Damen(Frauen) umzubringen. Nur weil sein Bruder davon beschädigt wurde, braucht er nicht jede Frau die ihren Verlobten oder ihren Mann betrügt umbringen. Erstens er hat kein Recht zweitens er braucht sich um diese Sache nicht zu kümmern.

Das ist auch eine harte Beleidigung für die Frauen.

Das ist etwas so als wollte er meinen, dass die Frauen mehr am schlimmsten sind, die Männer betrügen als die Männer, die Frauen betrügen. Der kleine Bruder von dem soll ja auch nicht so verknallt in dem Mädchen sein. Und er brauchte eigentlich auch nicht so wütend werden und die Freundin von ihm töten und auch den Typ, der mit seiner Freundin geschlafen hat töten. Nur weil sie ihn betrogen haben. Außerdem hat er kein Recht zwei Menschen umzubringen. Wenn es ihn nicht gefällt soll er ein anderen suchen.

Die Leute und Kinder sehen den Film und sagen das ist ein super Film aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in den Film drin ist.மன்மதன்

இந்தப் படத்தை நான் வெறுக்கிறேன். மன்மதன் என்று தமிழில் பெயர் (பிளே போய்). இந்தப்படம் யூனிவசிற்றியில் படிக்கும் பெண்களை வசியம்செய்து றேப்பண்ணி முடிவில் கொலைசெய்யும் ஒரு குற்றவாளியைப் பற்றியது.

இதில் மிகவும் மோசமான விடயம் என்னவெனில் தனது தம்பிக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாவே பெண்களை றேப் பண்ணுவதும் கொலைசெய்வதுமாகும். அவரது தம்பி ஒரு காதலியால் ஏமாற்றப்படுகின்றாள். அதனால் அவர் தனது காதலியையும் அவருடன் படுத்த இளைஞனையும் கொல்கிறார். பின்னர் தமயனிடம் சென்று நடந்தவைபற்றி எல்லாவிடயங்களையும் சொல்லிவிட்டு தானும் தற்கொலைசெய்கிறார். தற்கொலை செய்வதினை பார்த்த அண்ணனுக்கு மூளைஅணுக்கள் வெடிக்கின்றன. அதன்பின்னர் அவன் ஆண்களை ஏமாற்றும் பெண்களைக் கொல்கிறான்.

மேலும் பல பெண்களை அவன் கொலைசெய்தபின் பொலிசால் பிடிபடுகிறான். தான் கொலைகளைச் செய்யவில்லையென்றும் தனது தம்பியே செய்ததாகவும் சொன்னபோது பொலிஸ் நூறுவீதம் அவனை நம்பி விடுதலைசெய்கிறது. தொடர்ந்து இந்தக் குற்றவாளிக்கு ஏமாற்றும் பெண்களை மனச்சாட்சியின்றி கொல்லுவதே நோக்கமாகும்.
தனது பக்கம் கடவுள் இருப்பதாகவும் தனக்கு உறுதுணையாக இருப்பாரென்றும் உறுதியாக நம்புகிறான்.

கருத்து:

அத்தனை இளம் பெண்களையும் கொல்லுவதற்கு அவனுக்கு உரிமையில்லை. தனது சகோதரன் ஏமாற்றப்பட்டதற்காக கணவரையோ அல்லது தான் மணந்துகொள்ளவிருக்கும் ஒரு ஆளையோ ஏமாற்றுவதனால் அந்த ஒவ்வொரு பெண்ணையும் கொல்தல் தேவையில்லை. ஒன்று அவருக்கு இப்படி நடந்துகொள்ள உரிமையில்லை. இரண்டாவது இந்த விடயத்தில் தலையிடத் தேவையில்லை.

இது பெண்கள்மீது செலுத்தப்படும் கடுமையான அவமதிப்பாகும்.
மேலும் பெண்களை ஏமாற்றும் ஆண்களைவிட ஆண்களை ஏமாற்றும் பெண்களே அதிகமென்றும் கருதுவதுபோலவும் தெரிகிறது.
அவருடைய தம்பியும் இவ்வளவு வெறியாக தனது காதலியில் இருந்திருக்கக்கூடாதுதானே. அவரும் இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கத் தேவையில்லை அவவையும் அவருடன் படுத்த ஆளையும் கொண்டிருக்கவும் தேவையில்லை. அதுவும் அவர்கள் அவரை ஏமாற்றியது என்ற ஒரே காரணத்திற்காக! அவருக்கும் இரண்டு மனிதர்களைக் கொல்வதற்கு உரிமையே இல்லை. அவருக்குப் பிடிக்கவில்லையெனில் வேறு ஒருஆளைத் தேடியிருக்கலாம்தானே.

இந்தப் படத்தினைப் பார்த்து ஆட்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

- செந்தூரன், 6.02.2005உனது கருத்து:

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 18, 2005

வாழும்வரை போராடு…….

…….ஆனால் பிறரை அடித்து வாழாதே!இலக்கியம் என்ற பெயரில் வன்முறைகள் நடந்தது. பதுங்கு குழியே பாதுகாப்பாகியது. ஆனால் எவ்வளவு நாளைக்கெண்டுதான் பதுங்குகுழிக்குள்ள கிடக்கிறது….. எட்டிப் பாத்தன்…… சின்னஞ் சிறுசுகள் நிண்டினம். அம்மா அப்பா இருந்தும் கூட சில வேளை தனிமையாய் உணர்ர பிள்ளையள்… சின்னப் பிள்ளையள் எண்டா நல்ல விருப்பம்! அவயள் தங்கடை கருத்துக்களைச் சொல்லேக்கையும் திறமைகளைக் காட்டேக்கையும்…...அவையளின்ரை கருத்துக்களையெல்லாம் கருத்துக்களாகவே கண்டுகொள்றதில்ல ''பெரிய“ ஆக்கள்....?..?..?

(செல் அடியா அல்லது சொல் அடியா வன்முறைமிக்கது எண்டு தயவுசெய்து விவாதங்களைத் தொடங்கிவிடாதேங்கோ)

எனது சின்னத் தோழனின் கருத்துக்களை புளொக்கில் முன்வைத்தது இந்த ஆதங்கத்தில்தான். ''பெரிய“ இலக்கியக்காரர்களிடம் நாம் ஏமாந்துபோனோம்.

பிள்ளைகள் வன்முறையை உள்வாங்குவதற்குப் பல காரணிகள் அமைந்துவிடுகின்றன. அது ஒரு சினிமாப்பாடலாக.. ஒரு சினிமாப்படமாக.. பக்கத்தில் இருக்கும் நண்பியோ அல்லது ஒரு நண்பனோ, அல்லது வீட்டில் அம்மா அப்பாக்களின் நடைமுறையோ, அல்லது அவர்கள் சந்திக்கும் இனவாத நிகழ்வுகளோ ஏதாவது யாராவது ஒன்று… மாறிமாறியோ சேர்ந்தோ கூடுதலாகவோ குறைவாகவோ இலங்கையிலோ இங்கோ அமெரிக்கக் கண்டத்திலோ இருக்கும் பிள்ளைகளில் உடல் உளரீதியாக தாக்கம் செலுத்தும். பிள்ளைகள் வன்முறையை எமது சினிமாவினூடாகவும் தாராளமாக உள்வாங்குகின்றனர். மன்மதன் ஒரு வெறும் தற்செயலான உதாரணம்தான்.

செந்தூரனின் கருத்துக்களை முன்வைத்தது ஒரு சிறுவன் எப்படிக் கருதுகின்றான் என்பதை சுட்டிக்காட்டுவதற்கும், அவர் கருத்தை வளர்த்தெடுப்பதற்கும், இப்படியான கருத்துக்கள் வளர்த்தெடுக்கப்படவேண்டிய தேவையிருப்பதாலும், சிறு பிள்ளைகள் என்று அவர்கள் கருத்தை ஒருத்தரும் பெரிது படுத்துவதில்லை என்றும் அவரது கருத்திலிருந்து அவர் தரத்திற்கு விவாதங்கள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கையிலும். ஆனால் செந்தூரனின் கருத்தை யாருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தம்மையே முன்நிறுத்துவதில்த்தான் கவனம்! இதிலிருந்து ''உயர்ந்த“ இலக்கியவாதிகளின் கவனம் சிறுதுளியும் பிள்ளைகளின் பக்கமாக இல்லையென்பது வெளிச்சமாகிவிட்டது.
பாவம் செந்தூரன் புளொக்கில் கருத்துத் தெரிவித்துவிட்டு பெரும் துடிப்புடன் இலங்கையில் உள்ள தனது தாத்தாவிற்கும் அறிவித்துவிட்டு பதிற் கருத்துக்களுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தான். அவர் கருத்துக்களுக்குச் சம்பந்தமே இல்லாமல் எங்கேயோ எங்கேயோ போய்விட்டது ''விவாதம்.“
''எனது விமர்சனத்தை புளொக்கில் போய்ப் பாருங்கள்“ என்று தனது நண்பர்களுக்குக்கூட சொல்ல முடியாத நிலை நண்பனுக்கு!

இதுக்கு மிஞ்சியும் தாங்கேலாது.

செந்தூரன் வாரும் நாங்கள் போவம்.பி.கு.
நான் சிறுமியா இருக்கேக்க ஐஞ்சு வருசம் பயங்கரவாதி என்ற பெயரோட சிறைக்குள்ள இருந்திட்டு வந்த அண்ணர் சிறைக்கு வெளியால அவரைக் கூப்பிடப்போயிருக்கேக்க என்னைப் பாத்துச் சொன்னார்: ''நீ வளந்தாப் பிறகு எங்களுக்குச் சுதந்திரம் கிடைச்சிடும். நாங்கள் ஒருத்தரும் அடிமையா வாழத்தேவையில்லை.“ எண்டு.
என்னைப் பெரியவளாக்கிய செந்தூரனின் பரம்பரையும் அரசியல் அகதி!

இப்ப நான் செந்தூரனைப் பாத்து என்ன சொல்லப்போறன் தெரியுமோ:
''செந்தூரன் நீங்கள் வளந்தாப் பிறகு இந்த உலகமே வேறமாதிரி இருக்கும். குறிப்பா இந்த விடயங்களில: இலக்கியம்… விவாதம்….. கருத்துச் சதந்திரம்…. சின்னப் பிள்ளையள் கதைக்கேக்கை வலு கவனமாக் கேட்பினம் பெரிய ஆட்கள். இன்னும் நிறைய மாற்றங்கள் வரும். அதனால இப்ப நீங்கள் கவலைப்படாதேங்கோ!“

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, February 14, 2005

அடே போடா மன்மதா!

பெண்களை அவமதித்தாய்….!

"Die Leute und Kinder sehen den Film und sagen, dass der ein super Film ist. Aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in dem Film drin ist.“ ~ Senthuran, 12 Jahre alt.

"இந்தப் படத்தினைப் பார்த்து சனங்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.“
- செந்தூரன், வயது 12 (சில வருடங்களாக ஜேர்மனியில் வசித்துவருகின்றார்.)

பதினாறோ அல்லது பதினெட்டு வயதிலோ "தண்டனை“ என்ற ஒரு சிறுகதையை "நமது குரல்" என்கின்ற பெண்கள் சஞ்சிகையில் எழுதியத்திற்கெதிராக கடுமையான விமர்சனங்களை சந்திக்கநேர்ந்தது. இதன் உள்ளடக்கம் கணவரால் நிதமும் சித்திரவதைக்கு உள்ளான ஒரு மனைவி இறுதியில் தனது கணவரை மிகவும் கெட்டித்தனமாகக் கொல்கிறார். இது தொடர்ச்சியாகச் செய்த மூன்றாவது ஆண்கொலை என்று நினைக்கிறேன். "நாட்டில் கொலைக்கலாச்சாரம் நிறைந்து வழியும் ஒரு காலகட்டத்தில் இப்படி எழுதுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது“ என்று அந்தக்காலத்தில் அக்கறையுடைய தோழர்கள் விமர்சனங்கள் சொன்னபோது அது சரியென்றே தோன்றியது. அதற்குப்பின் கதைகளில் நானாக யாரையும் கொன்றதாக ஞாபகமில்லை. மற்றவர்களுக்குத் தெரியாமல் மனதுக்குள் கொன்றிருக்கக் கூடும். ஆனால் அப்பட்டமாகச் எழுதத் துணிவில்லை. சில வேளைகளில் சில விடயங்களுக்கு மனுசி-மனுசம் துணியாமல் இருப்பதுகூட நல்லதென்றே தோன்றுகிறது. அன்று கதைகளில் கொல்லும் எனது செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நண்பர்களின் கருத்துக்கள் இறவா வரம் பெற்றவை! புத்தகங்களுக்குள் புதைக்கப்பட்ட மனிதர்களை மீட்டு எடுக்கமுடியாது. ஆனால்…மனதுள் விளைந்த புதிய கருத்துக்களை மரணிக்கவிடாமல் வளர்க்கமுடியுமே!.
(இன்றுவரையில் கொலைக் கலாச்சாரத்திற்கு மட்டும் சாவு வரவில்லை என்பதுதான் மிகவும் வருத்தம்.)

வீட்டிலும் றோட்டிலும் கொலைகள் நடக்கிறதோ இல்லையோ ஒரு இடத்தில் தொடர்ந்து தலைகள் விழுந்துகொண்டே இருக்கும். அதுதான் சினிமா! பாக்கு வெத்திலையுடன் சுண்ணாம்பு தடவாமல் விட்டால் எப்படியிருக்கும்? சிகப்பாகாது இல்லையா? அப்படித்தான் சிலவேளைகளில் சினிமாவிற்குக் கதையெழுதுகிறார்களோ என்று எண்ணத் தூண்டும் காட்சிகள்!

தமிழ் சினிமா அடிக்கடி எமக்குத் தரும் செய்திகளில்
ஒன்று: பெண்கள் கேவலமானவர்கள். அல்லது கேவலப்படுத்துங்கள்!
இரண்டு: உங்களுக்கு ஒத்துவராத ஆட்களைப் போட்டுத் தள்ளுங்கள்! குறைந்த பட்சம் கை காலையாவது முறியுங்கள் என்பதாகும்.
சில படங்களைப் பார்த்தால் கொலை! கொலை! கொலை!

நாம் பார்ப்பது கேட்பது சிரிப்பது உண்பது என்கின்ற வாழ்வில் எமக்கு மிக ஐக்கியமாக இருக்கும் விடயங்களைக்கூட தெரிவுசெய்யும் உரிமையும் சந்தர்ப்பமும் சிலசமயங்களில் எமக்கு மறுக்கப்படுகின்றது.. நண்பர்களின் வீட்டிலோ தெரிந்தவர்களுடன் இருக்கும்போது நாம் விருப்பமில்லாத தமிழ்ப் படங்களையெல்லாம் பார்க்க நேரிடுகின்றது. மற்றும்படி தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களையே பார்ப்பதுண்டு.

சில தமிழ்ப்படங்களைப் பார்த்துவிட்டு அதன் கெட்ட தாக்கத்திலிருந்து விடுபட வேறு நாட்டு நல்ல படங்களைப் பார்த்துத் தேறாப்பி செய்ய வேண்டிவருகின்றது. காதலையும் கொலையையும் பெண்களைக் கேவலப்படுத்தும் விடயங்களையும் தவிர்ந்த வேறு ஏதாவது ஒரு விடயத்துடன் அவை இருக்குமே!

நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர்களின் பன்னிரண்டு வயதுடைய மகன் "மன்மதன் சுப்பர்ப் படம் பார்ப்பமோ?“ என்று கேட்டது மட்டுமல்லாமல் சீடியைக் கையில் வைத்து சுளட்டிக்கொணடிரருந்தான். மன்மதன் பற்றி சரியாகத் தெரியாது. தமிழ்ப்படங்களை அண்மையில் பார்க்கவும் இல்லை அறியவுமில்லை. ஆர்வம் மேலிட "நல்ல படமோ?“ என்று கேட்க "உதவாத படம். சிம்புவின் ஆண்குறியை வெட்வேண்டும் என்று றோசா வசந்தன் விமர்சனம் எழுதியிருக்கிறார் தமிழ் மணத்தில்" என்று நண்பர் சொல்ல எனது குட்டி நண்பனோ விட்டதாக இல்லை. "ஆனால் சிம்புவின் நடிப்பு சுப்பர். உங்களோடை இருந்து பாக்கப்போறன். ஒருக்கால் எற்கனவே பார்த்திட்டன். உங்கட கருத்து என்னவெண்டு தெரிஞ்சுகொள்ள ஆசையாக இருக்கு என்று குட்டி நண்பன் ஒன்றைக்காலில் நிற்க மன்மதனை அசையவிட்டோம். சகிக்கமுடியாத கட்டங்களை வெட்டி வெட்டி..

இரண்டாவது தடவைகள் (எத்தனை தடவைகள் என்று சரியாகத் தெரியாது) பார்த்தும் ஒவ்வொரு சின்ன அசைவுகளையும் கண்வெட்டாமல் இரசித்துப் பார்க்கும் அவனின் போக்கு கவலையாகவிருந்தது. இவன் எதிர்காலம் மீதான பயத்தினைத் தந்தது. இவன் மட்டுமல்ல எமது தமிழ் நண்பர்களின் பிள்ளைகளாகிய குட்டி நண்பர்களெல்லாம் வளர்ந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடி படங்களை எந்தத் தங்குதடையும் இன்றிப் பார்க்கிறார்கள். இதுபற்றிக் கதைத்தால் "இங்கிலீஸ் படங்களில பார்க்காத வன்முறையையே இதுகளில காணப் போகுதுகள்." என்றுதான் பதில் பெற்றாரிடமிருந்து வருகிறது. ஆனால் வாயை மூடிக்கொண்டிருக்க முடிவதில்லை. முடிந்தவரை இது பற்றி "வளர்ந்த" நண்பர்களுடன் விவாதிக்கவேண்டியிருக்கிறது.

மன்மதன் போன்ற படங்கள் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. பார்க்கப்பட்ட காலமும் பக்கத்தில் இருந்தவர்களும்தான் புதிதாக இருந்தது.
சிறுவர்களுடன் கூடுதலாக "Shreck" பற்றிக் கதைப்பதுவோ அல்லது கொஞ்சம் வளர்ந்தவர்களென்டால் "Harry Potter" பார்ப்பதும் கதைப்பதுடனும் நின்றுவிடும். ஆகலும் மிஞ்சினால் பதினைந்து பதினாறு வயது நண்பிகள் "காதல்“ பாத்தியா? “றெயின்போ காலனி“ எப்பிடி? என்பதற்கு "ஓம்“ அல்லது "இல்லை“ "நல்லது“ அல்லது "சரியில்லை“ என்பதுடன் நின்றுவிடும். ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவனுடன் தமிழ்படம் ஒன்றைப் பார்த்து விவாதிப்பதென்பது ஒரு சுவார்சயமான விடயம்தான் (அதற்கு மன்மதனா அம்பிட்டான் என்று கேட்கவேண்டாம் "அடல்ற் ஒன்லி" படத்தை சிறுவனுடன் சேர்ந்து பார்த்த குற்றவாளியென்று திட்டவேண்டாம். இது ஒரு Ausnahme).

மன்மதன் தனது தந்திரத்தால் பொலிசிடமிருந்து விடுதலையாகி மக்கள் மத்தியில் மீண்டும் சாதாரணமாக நடமாடுபோது நாம் இது பற்றி விவாதிக்கத் தொடங்கினோம்.
எனக்குத் தெரிந்த ஒரு தோழி "மனிதர்கள் ஒரு வயதினைத் தாண்டியபின்பு அவர்களுக்குள் பெரிய அளவில் மாற்றம் ஏற்படச் சாத்தியம் இல்லை என்றும் சிறுவர்களை நோக்கியே எமது கவனம் இருக்கவேண்டும்" என்றும் கூறுவா.
குறிப்பிட்ட வளர்ச்சியடையும் ஒரு பருவத்தில் பிள்ளைகள் தமது சொந்தக் கருத்துக்களில் சரியாகப் பதப்பட முன்னர் அவர்களை நல்ல கருத்துக்கள் நோக்கியோ மாறாகவோ கொண்டுசெல்லமுடியும் என்கின்ற நம்பிக்கை செந்தூரனுடன் ஆரம்பத்தில் கதைத்தற்கும் பின்னர் விவாதிக்கும்போது ஏற்பட்ட மாற்றங்களிலும் தெரிந்தது.
இவர் ஜேர்மன் மொழியில் எழுதிய கருத்தை கீழே தருகிறேன்.

-நிரூபா , 14.02.2005

உனது கருத்து
என்றும் ஒரு பகுதியை எனக்காக விட்டிருந்தார்.Manmathan

Ich hasse diesen Film. „Manmathan“ heißt in Tamilisch, etwa „Play Bay“. In diesem Film geht es um einen Kriminalist, der in Universität lernt und gut die Frauen anziehen kann und dann vergewaltig die Frauen und bringt anschließend um.

Das schlimmste ist, er vergewaltigt und tötet die nur, weil sein kleinen Bruder von so einem Fall sehr betroffen worden war. Er wurde von einer Freundin betrogen. Er brachte seine Freundin um und der Junge, der mit ihr geschlafen hatte, auch um. Dann ging er zu seinem Bruder und erzählt alles und bracht er sich selbst um. Und als der große Bruder das sah platzte bei dem der Gehirnzelle und er brachte alle Frauen um, die Männer betrügen.

Er tötete immer mehr Frauen und irgendwann schnappte die Polizei ihn und erzählte alles was geschah aber zuletzt sagte er das sein Bruder alle Frauen getötet hat und nicht er.
Dann glaubten die Polizisten ihn 100 % und ließen ihn frei und er wollte trotzdem weiter machen. Der Kriminalist wollte immer noch betrügende Frauen unbedingt und herzlos weiter jagen.

Er meinte auch sehr streng, dass der Gott in seiner Seite steht und ihm hilft.

Meinung:

Er hat kein Recht so viele Junge Damen(Frauen) umzubringen. Nur weil sein Bruder davon beschädigt wurde, braucht er nicht jede Frau die ihren Verlobten oder ihren Mann betrügt umbringen. Erstens er hat kein Recht zweitens er braucht sich um diese Sache nicht zu kümmern.

Das ist auch eine harte Beleidigung für die Frauen.

Das ist etwas so als wollte er meinen, dass die Frauen mehr am schlimmsten sind, die Männer betrügen als die Männer, die Frauen betrügen. Der kleine Bruder von dem soll ja auch nicht so verknallt in dem Mädchen sein. Und er brauchte eigentlich auch nicht so wütend werden und die Freundin von ihm töten und auch den Typ, der mit seiner Freundin geschlafen hat töten. Nur weil sie ihn betrogen haben. Außerdem hat er kein Recht zwei Menschen umzubringen. Wenn es ihn nicht gefällt soll er ein anderen suchen.

Die Leute und Kinder sehen den Film und sagen das ist ein super Film aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in den Film drin ist.மன்மதன்

இந்தப் படத்தை நான் வெறுக்கிறேன். மன்மதன் என்று தமிழில் பெயர் (பிளே போய்). இந்தப்படம் யூனிவசிற்றியில் படிக்கும் பெண்களை வசியம்செய்து றேப்பண்ணி முடிவில் கொலைசெய்யும் ஒரு குற்றவாளியைப் பற்றியது.

இதில் மிகவும் மோசமான விடயம் என்னவெனில் தனது தம்பிக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாவே பெண்களை றேப் பண்ணுவதும் கொலைசெய்வதுமாகும். அவரது தம்பி ஒரு காதலியால் ஏமாற்றப்படுகின்றாள். அதனால் அவர் தனது காதலியையும் அவருடன் படுத்த இளைஞனையும் கொல்கிறார். பின்னர் தமயனிடம் சென்று நடந்தவைபற்றி எல்லாவிடயங்களையும் சொல்லிவிட்டு தானும் தற்கொலைசெய்கிறார். தற்கொலை செய்வதினை பார்த்த அண்ணனுக்கு மூளைஅணுக்கள் வெடிக்கின்றன. அதன்பின்னர் அவன் ஆண்களை ஏமாற்றும் பெண்களைக் கொல்கிறான்.

மேலும் பல பெண்களை அவன் கொலைசெய்தபின் பொலிசால் பிடிபடுகிறான். தான் கொலைகளைச் செய்யவில்லையென்றும் தனது தம்பியே செய்ததாகவும் சொன்னபோது பொலிஸ் நூறுவீதம் அவனை நம்பி விடுதலைசெய்கிறது. தொடர்ந்து இந்தக் குற்றவாளிக்கு ஏமாற்றும் பெண்களை மனச்சாட்சியின்றி கொல்லுவதே நோக்கமாகும்.
தனது பக்கம் கடவுள் இருப்பதாகவும் தனக்கு உறுதுணையாக இருப்பாரென்றும் உறுதியாக நம்புகிறான்.

கருத்து:

அத்தனை இளம் பெண்களையும் கொல்லுவதற்கு அவனுக்கு உரிமையில்லை. தனது சகோதரன் ஏமாற்றப்பட்டதற்காக கணவரையோ அல்லது தான் மணந்துகொள்ளவிருக்கும் ஒரு ஆளையோ ஏமாற்றுவதனால் அந்த ஒவ்வொரு பெண்ணையும் கொல்தல் தேவையில்லை. ஒன்று அவருக்கு இப்படி நடந்துகொள்ள உரிமையில்லை. இரண்டாவது இந்த விடயத்தில் தலையிடத் தேவையில்லை.

இது பெண்கள்மீது செலுத்தப்படும் கடுமையான அவமதிப்பாகும்.
மேலும் பெண்களை ஏமாற்றும் ஆண்களைவிட ஆண்களை ஏமாற்றும் பெண்களே அதிகமென்றும் கருதுவதுபோலவும் தெரிகிறது.
அவருடைய தம்பியும் இவ்வளவு வெறியாக தனது காதலியில் இருந்திருக்கக்கூடாதுதானே. அவரும் இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கத் தேவையில்லை அவவையும் அவருடன் படுத்த ஆளையும் கொண்டிருக்கவும் தேவையில்லை. அதுவும் அவர்கள் அவரை ஏமாற்றியது என்ற ஒரே காரணத்திற்காக! அவருக்கும் இரண்டு மனிதர்களைக் கொல்வதற்கு உரிமையே இல்லை. அவருக்குப் பிடிக்கவில்லையெனில் வேறு ஒருஆளைத் தேடியிருக்கலாம்தானே.

இந்தப் படத்தினைப் பார்த்து ஆட்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.- செந்தூரன், 6.02.2005
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Website Counter
Website Counters