Saturday, February 19, 2005

பெண்களை அவமதித்தாய்….!



"Die Leute und Kinder sehen den Film und sagen, dass der ein super Film ist. Aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in dem Film drin ist.“
~ Senthuran, 12 Jahre alt.


"இந்தப் படத்தினைப் பார்த்து சனங்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.“
- செந்தூரன், வயது 12 (சில வருடங்களாக ஜேர்மனியில் வசித்துவருகின்றார்.)



Manmathan

Ich hasse diesen Film. „Manmathan“ heißt in Tamilisch, etwa „Play Bay“. In diesem Film geht es um einen Kriminalist, der in Universität lernt und gut die Frauen anziehen kann und dann vergewaltig die Frauen und bringt anschließend um.

Das schlimmste ist, er vergewaltigt und tötet die nur, weil sein kleinen Bruder von so einem Fall sehr betroffen worden war. Er wurde von einer Freundin betrogen. Er brachte seine Freundin um und der Junge, der mit ihr geschlafen hatte, auch um. Dann ging er zu seinem Bruder und erzählt alles und bracht er sich selbst um. Und als der große Bruder das sah platzte bei dem der Gehirnzelle und er brachte alle Frauen um, die Männer betrügen.

Er tötete immer mehr Frauen und irgendwann schnappte die Polizei ihn und erzählte alles was geschah aber zuletzt sagte er das sein Bruder alle Frauen getötet hat und nicht er.
Dann glaubten die Polizisten ihn 100 % und ließen ihn frei und er wollte trotzdem weiter machen. Der Kriminalist wollte immer noch betrügende Frauen unbedingt und herzlos weiter jagen.

Er meinte auch sehr streng, dass der Gott in seiner Seite steht und ihm hilft.

Meinung:


Er hat kein Recht so viele Junge Damen(Frauen) umzubringen. Nur weil sein Bruder davon beschädigt wurde, braucht er nicht jede Frau die ihren Verlobten oder ihren Mann betrügt umbringen. Erstens er hat kein Recht zweitens er braucht sich um diese Sache nicht zu kümmern.

Das ist auch eine harte Beleidigung für die Frauen.

Das ist etwas so als wollte er meinen, dass die Frauen mehr am schlimmsten sind, die Männer betrügen als die Männer, die Frauen betrügen. Der kleine Bruder von dem soll ja auch nicht so verknallt in dem Mädchen sein. Und er brauchte eigentlich auch nicht so wütend werden und die Freundin von ihm töten und auch den Typ, der mit seiner Freundin geschlafen hat töten. Nur weil sie ihn betrogen haben. Außerdem hat er kein Recht zwei Menschen umzubringen. Wenn es ihn nicht gefällt soll er ein anderen suchen.

Die Leute und Kinder sehen den Film und sagen das ist ein super Film aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in den Film drin ist.



மன்மதன்

இந்தப் படத்தை நான் வெறுக்கிறேன். மன்மதன் என்று தமிழில் பெயர் (பிளே போய்). இந்தப்படம் யூனிவசிற்றியில் படிக்கும் பெண்களை வசியம்செய்து றேப்பண்ணி முடிவில் கொலைசெய்யும் ஒரு குற்றவாளியைப் பற்றியது.

இதில் மிகவும் மோசமான விடயம் என்னவெனில் தனது தம்பிக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாவே பெண்களை றேப் பண்ணுவதும் கொலைசெய்வதுமாகும். அவரது தம்பி ஒரு காதலியால் ஏமாற்றப்படுகின்றாள். அதனால் அவர் தனது காதலியையும் அவருடன் படுத்த இளைஞனையும் கொல்கிறார். பின்னர் தமயனிடம் சென்று நடந்தவைபற்றி எல்லாவிடயங்களையும் சொல்லிவிட்டு தானும் தற்கொலைசெய்கிறார். தற்கொலை செய்வதினை பார்த்த அண்ணனுக்கு மூளைஅணுக்கள் வெடிக்கின்றன. அதன்பின்னர் அவன் ஆண்களை ஏமாற்றும் பெண்களைக் கொல்கிறான்.

மேலும் பல பெண்களை அவன் கொலைசெய்தபின் பொலிசால் பிடிபடுகிறான். தான் கொலைகளைச் செய்யவில்லையென்றும் தனது தம்பியே செய்ததாகவும் சொன்னபோது பொலிஸ் நூறுவீதம் அவனை நம்பி விடுதலைசெய்கிறது. தொடர்ந்து இந்தக் குற்றவாளிக்கு ஏமாற்றும் பெண்களை மனச்சாட்சியின்றி கொல்லுவதே நோக்கமாகும்.
தனது பக்கம் கடவுள் இருப்பதாகவும் தனக்கு உறுதுணையாக இருப்பாரென்றும் உறுதியாக நம்புகிறான்.


கருத்து:

அத்தனை இளம் பெண்களையும் கொல்லுவதற்கு அவனுக்கு உரிமையில்லை. தனது சகோதரன் ஏமாற்றப்பட்டதற்காக கணவரையோ அல்லது தான் மணந்துகொள்ளவிருக்கும் ஒரு ஆளையோ ஏமாற்றுவதனால் அந்த ஒவ்வொரு பெண்ணையும் கொல்தல் தேவையில்லை. ஒன்று அவருக்கு இப்படி நடந்துகொள்ள உரிமையில்லை. இரண்டாவது இந்த விடயத்தில் தலையிடத் தேவையில்லை.

இது பெண்கள்மீது செலுத்தப்படும் கடுமையான அவமதிப்பாகும்.
மேலும் பெண்களை ஏமாற்றும் ஆண்களைவிட ஆண்களை ஏமாற்றும் பெண்களே அதிகமென்றும் கருதுவதுபோலவும் தெரிகிறது.
அவருடைய தம்பியும் இவ்வளவு வெறியாக தனது காதலியில் இருந்திருக்கக்கூடாதுதானே. அவரும் இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கத் தேவையில்லை அவவையும் அவருடன் படுத்த ஆளையும் கொண்டிருக்கவும் தேவையில்லை. அதுவும் அவர்கள் அவரை ஏமாற்றியது என்ற ஒரே காரணத்திற்காக! அவருக்கும் இரண்டு மனிதர்களைக் கொல்வதற்கு உரிமையே இல்லை. அவருக்குப் பிடிக்கவில்லையெனில் வேறு ஒருஆளைத் தேடியிருக்கலாம்தானே.

இந்தப் படத்தினைப் பார்த்து ஆட்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.


- செந்தூரன், 6.02.2005



உனது கருத்து:

5 Comments:

At 9:22 PM, Blogger ஒரு பொடிச்சி said...

செந்தூரன்!
நீங்கள் பார்த்த ஒரு படத்த ‘எல்லாரும் சொல்றதுமாதிரி’ 'சுப்பர்ப்'படம் பிடிச்சது எண்டோ, வெறுமன பிடிக்கேல்ல எண்டோ சொல்லாம... பிடிக்கேல்ல எண்டா ‘ஏன்’ என்ன காரணம் எண்டு எழுதியிருக்கிறிங்கள். இப்பிடி எல்லா விசயத்திலும் ‘கேள்வி’ கேக்கிற பிள்ளையள் செரியான குறைவு. அப்பிடியான பிள்ளையள்ள ஒராளா இந்த விமர்சனத்தில உங்களத் தெரியுது. இப்பிடி இன்னும் நிறைய நீங்க ஒவ்வொண்டைப் பற்றியம் (மற்றவையள் சொல்றதையே சொல்லாம) நிறைய நிறைய எழுத வாழ்த்துக்கள்!!
நிறைய நிறைய கேள்வி கேட்க வாழ்த்துக்கள்!
உங்கட தோழி நிருபாட பிளொக் இல எழுதலாம். (தமிழ் படங்கள்/தமிழ் சந்மந்தமான விசயங்கள) மற்றதுகள நீங்களே ஒரு blog தொடங்கியும் எழுதலாம். எழுதுங்கோ!

 
At 10:29 PM, Anonymous avasanthan said...

மன்னிக்க வேண்டும் நிருபா!
இப்போது நீங்கள் சொன்னபிறகுதான் திருப்பிப் படிக்கும் போது அப்பதிவு செந்தூரனின் பதிவாகவும் அப்பின்னூட்டங்கள் செந்தூரனையே பெரிதும் மையப்படுத்தியிருக்க வேண்டுமென்றும் புரிகிறது. வாசிப்பிலும் புரிந்து கொள்ளலிலும் ஏற்பட்ட தவறுக்கு மனம்வருந்துகிறேன். என்னைப்போலவே பலரும் புரிந்திருப்பார்களென்று நம்புகிறேன். பன்னிரண்டு வயதுச் சிறுவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் நிச்சயமாக அப்பதிவுகள் இல்லை. அவர் படிக்கமுடியாதபடி பெரிய புத்திஜீவித்தனத்துடன் தான் அவை இருக்கின்றன. அதிற்கலந்துகொண்டவன் என்ற முறையில் மன்னிப்புக் கேட்கிறேன், குறிப்பாக செந்தூரனிடம்.
இடையில் வந்து பின்னூட்டமிட்ட நீங்களாவது சாடைமாடையாகத் தெரிவித்திருக்கலாம். உண்மையில் செந்தூரனின் பதிலுக்கான காத்திருப்பும் எதிர்பார்ப்பும் யாருக்குமே தோன்றவில்லை. அது உங்கள் பதிவு போன்ற தோற்றத்தோடேயே அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. அதுவும் பெரும்பாலானவை வேறொரு தளத்தில் நடந்தவை அப்படியே இங்கும் வந்துவிட்டன.
செந்தூரனுக்கு!
பொடிச்சி உங்களுக்குச் சொன்னதே என்னிடமிருந்தும். இன்னும் எழுத என் வாழ்த்துக்கள். தனி வலைப்பதிவு தொடங்குவதும் நல்ல யோசனைதான். அவர்கள் அப்படி நினைக்கிறார்கள் அப்படிச் செய்கிறார்கள் என்ற பாணியிலேயே எழுதிக்கொண்டிருக்கும் எங்களுக்கு நீங்கள் என்ன நினைக்கிறீரகள் என்பதை அறிய ஆவல். பல விம்பங்கள் கூட உடைபடலாம் உங்களைப் போல் இன்னும் சிலர் எழுதும்போது.

 
At 10:45 PM, Blogger ROSAVASANTH said...

நானும் சென்றமுறை செந்தூரன் *வயது 12* என்கிற விடயத்தை தவறவிட்டிருக்கிறேன். இந்த வயதில் "தனது சகோதரன் ஏமாற்றப்பட்டதற்காக கணவரையோ அல்லது தான் மணந்துகொள்ளவிருக்கும் ஒரு ஆளையோ ஏமாற்றுவதனால் அந்த ஒவ்வொரு பெண்ணையும் கொல்தல் தேவையில்லை. ஒன்று அவருக்கு இப்படி நடந்துகொள்ள உரிமையில்லை. இரண்டாவது இந்த விடயத்தில் தலையிடத் தேவையில்லை." என்ற முதிர்சியுடன் இவர் சொல்வது மிகவும் நம்பிக்கையளிக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள், செந்தூரன்!

 
At 12:41 PM, Blogger raji said...

செந்தூரன் உங்களுக்கு ஓருவிடயத்தை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மற்றும் உங்கள் கருத்தை தெளிவாக சொல்லும் அறி;வு என்பன இந்தச் சிறுவயதிலேயே இருப்பது பாராட்டத்தக்கதாகும். ஆகவே தொடருங்கள். அராய்ந்ததை எங்களுக்கும் சொல்லுங்கள். காத்திருக்கிறோம். நடந்து முடியும் எல்லா விடயங்களையும் உங்களுக்கு அறிவை வளர்க்கும் விடயங்களாகக் கருதுங்கள். அனுபவங்களே வெற்றியின் துனையாக வரும். இன்னும் எழுதுங்கள். எதிர்பார்க்கிறோம்.

 
At 1:43 AM, Blogger Chandravathanaa said...

வணக்கம செந்தூரன்

Charles Bronson இன் படங்களைப் பார்த்து விட்டு கண்களை சுருக்கிக் கொண்டு அல்லது இடுக்கிக் கொண்டு (விளையாட்டுத்) துவக்கைக் கையில் பிடித்துக் கொண்டு கதாயநாயகப் பெருமையுடன் நின்ற குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன்.

James Bond போல துவக்கைச் சுழற்றிப் பிடித்துக் கொண்டு குட்டை மதிலில் இருந்து குதித்து கால் சுளுக்கிக் கொண்ட குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன்.
சார்ள்ஸ் புரோன்சனின் பெரும்பாலான படங்கள் பழி வாங்குவதாகவே இருக்கும். அவரின் படங்களையெல்லாம் பொக்கிசமாகச் சேமித்து வைத்த குழந்தைகளைக் கூடப் பார்த்திருக்கிறேன்.
இவர்களெல்லோருமே இவைகளைத் தவறென்று உணர இவர்களின் 18.. 19.. வயது வரை காத்திருக்க வேண்டிய அவசியம எனக்கிருந்தது.
நீங்கள் 12வயதிலேயே சில தவறுகளையும் தப்புக்களையும் உங்கள் மனசுக்குள்ளேயே அலசி எங்கள் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
உங்களுக்குப் போய் புத்தி சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த வயதிலான உங்கள் சிந்தனையோட்டத்துக்கு பாராட்டுக்களைத்தான் என்னால் தர முடிகிறது.
தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை தயங்காமல் இங்கே முன் வையுங்கள். முடிந்தவரைக்கும் நானும் என் கருத்துக்களைத் தருகிறேன்.
யாருமே கருத்துத் தராவிட்டாலும் தளர்ந்து போகாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Website Counter
Website Counters