Friday, February 18, 2005

வாழும்வரை போராடு…….

…….ஆனால் பிறரை அடித்து வாழாதே!இலக்கியம் என்ற பெயரில் வன்முறைகள் நடந்தது. பதுங்கு குழியே பாதுகாப்பாகியது. ஆனால் எவ்வளவு நாளைக்கெண்டுதான் பதுங்குகுழிக்குள்ள கிடக்கிறது….. எட்டிப் பாத்தன்…… சின்னஞ் சிறுசுகள் நிண்டினம். அம்மா அப்பா இருந்தும் கூட சில வேளை தனிமையாய் உணர்ர பிள்ளையள்… சின்னப் பிள்ளையள் எண்டா நல்ல விருப்பம்! அவயள் தங்கடை கருத்துக்களைச் சொல்லேக்கையும் திறமைகளைக் காட்டேக்கையும்…...அவையளின்ரை கருத்துக்களையெல்லாம் கருத்துக்களாகவே கண்டுகொள்றதில்ல ''பெரிய“ ஆக்கள்....?..?..?

(செல் அடியா அல்லது சொல் அடியா வன்முறைமிக்கது எண்டு தயவுசெய்து விவாதங்களைத் தொடங்கிவிடாதேங்கோ)

எனது சின்னத் தோழனின் கருத்துக்களை புளொக்கில் முன்வைத்தது இந்த ஆதங்கத்தில்தான். ''பெரிய“ இலக்கியக்காரர்களிடம் நாம் ஏமாந்துபோனோம்.

பிள்ளைகள் வன்முறையை உள்வாங்குவதற்குப் பல காரணிகள் அமைந்துவிடுகின்றன. அது ஒரு சினிமாப்பாடலாக.. ஒரு சினிமாப்படமாக.. பக்கத்தில் இருக்கும் நண்பியோ அல்லது ஒரு நண்பனோ, அல்லது வீட்டில் அம்மா அப்பாக்களின் நடைமுறையோ, அல்லது அவர்கள் சந்திக்கும் இனவாத நிகழ்வுகளோ ஏதாவது யாராவது ஒன்று… மாறிமாறியோ சேர்ந்தோ கூடுதலாகவோ குறைவாகவோ இலங்கையிலோ இங்கோ அமெரிக்கக் கண்டத்திலோ இருக்கும் பிள்ளைகளில் உடல் உளரீதியாக தாக்கம் செலுத்தும். பிள்ளைகள் வன்முறையை எமது சினிமாவினூடாகவும் தாராளமாக உள்வாங்குகின்றனர். மன்மதன் ஒரு வெறும் தற்செயலான உதாரணம்தான்.

செந்தூரனின் கருத்துக்களை முன்வைத்தது ஒரு சிறுவன் எப்படிக் கருதுகின்றான் என்பதை சுட்டிக்காட்டுவதற்கும், அவர் கருத்தை வளர்த்தெடுப்பதற்கும், இப்படியான கருத்துக்கள் வளர்த்தெடுக்கப்படவேண்டிய தேவையிருப்பதாலும், சிறு பிள்ளைகள் என்று அவர்கள் கருத்தை ஒருத்தரும் பெரிது படுத்துவதில்லை என்றும் அவரது கருத்திலிருந்து அவர் தரத்திற்கு விவாதங்கள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கையிலும். ஆனால் செந்தூரனின் கருத்தை யாருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தம்மையே முன்நிறுத்துவதில்த்தான் கவனம்! இதிலிருந்து ''உயர்ந்த“ இலக்கியவாதிகளின் கவனம் சிறுதுளியும் பிள்ளைகளின் பக்கமாக இல்லையென்பது வெளிச்சமாகிவிட்டது.
பாவம் செந்தூரன் புளொக்கில் கருத்துத் தெரிவித்துவிட்டு பெரும் துடிப்புடன் இலங்கையில் உள்ள தனது தாத்தாவிற்கும் அறிவித்துவிட்டு பதிற் கருத்துக்களுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தான். அவர் கருத்துக்களுக்குச் சம்பந்தமே இல்லாமல் எங்கேயோ எங்கேயோ போய்விட்டது ''விவாதம்.“
''எனது விமர்சனத்தை புளொக்கில் போய்ப் பாருங்கள்“ என்று தனது நண்பர்களுக்குக்கூட சொல்ல முடியாத நிலை நண்பனுக்கு!

இதுக்கு மிஞ்சியும் தாங்கேலாது.

செந்தூரன் வாரும் நாங்கள் போவம்.பி.கு.
நான் சிறுமியா இருக்கேக்க ஐஞ்சு வருசம் பயங்கரவாதி என்ற பெயரோட சிறைக்குள்ள இருந்திட்டு வந்த அண்ணர் சிறைக்கு வெளியால அவரைக் கூப்பிடப்போயிருக்கேக்க என்னைப் பாத்துச் சொன்னார்: ''நீ வளந்தாப் பிறகு எங்களுக்குச் சுதந்திரம் கிடைச்சிடும். நாங்கள் ஒருத்தரும் அடிமையா வாழத்தேவையில்லை.“ எண்டு.
என்னைப் பெரியவளாக்கிய செந்தூரனின் பரம்பரையும் அரசியல் அகதி!

இப்ப நான் செந்தூரனைப் பாத்து என்ன சொல்லப்போறன் தெரியுமோ:
''செந்தூரன் நீங்கள் வளந்தாப் பிறகு இந்த உலகமே வேறமாதிரி இருக்கும். குறிப்பா இந்த விடயங்களில: இலக்கியம்… விவாதம்….. கருத்துச் சதந்திரம்…. சின்னப் பிள்ளையள் கதைக்கேக்கை வலு கவனமாக் கேட்பினம் பெரிய ஆட்கள். இன்னும் நிறைய மாற்றங்கள் வரும். அதனால இப்ப நீங்கள் கவலைப்படாதேங்கோ!“

4 Comments:

At 9:00 PM, Blogger ஒரு பொடிச்சி said...

Nirupa,
எனக்கு ‘குட்டி இளவரசன்’ தான் ஞாபகம் வாறான்! உண்மையா இது ‘வளர்நதவர்களின்’ shame தான்!
இனி உங்களோட கதை இல்ல.
இது செந்தூரனுக்கு!:


செந்தூரன்!
நீங்கள் பார்த்த ஒரு படத்த ‘எல்லாரும் சொல்றதுமாதிரி’ 'சுப்பர்ப்'படம் பிடிச்சது எண்டோ, வெறுமன பிடிக்கேல்ல எண்டோ சொல்லாம... பிடிக்கேல்ல எண்டா ‘ஏன்’ என்ன காரணம் எண்டு எழுதியிருக்கிறிங்கள். இப்பிடி எல்லா விசயத்திலும் ‘கேள்வி’ கேக்கிற பிள்ளையள் செரியான குறைவு. அப்பிடியான பிள்ளையள்ள ஒராளா இந்த விமர்சனத்தில உங்களத் தெரியுது. இப்பிடி இன்னும் நிறைய நீங்க ஒவ்வொண்டைப் பற்றியம் (மற்றவையள் சொல்றதையே சொல்லாம) நிறைய நிறைய எழுத வாழ்த்துக்கள்!!
நிறைய நிறைய கேள்வி கேட்க வாழ்த்துக்கள்!
உங்கட தோழி நிருபாட பிளொக் இல எழுதலாம். (தமிழ் படங்கள்/தமிழ் சந்மந்தமான விசயங்கள) மற்றதுகள நீங்களே ஒரு blog தொடங்கியும் எழுதலாம். எழுதுங்கோ!பி.கு.: நிருபா, நீங்க செந்தூரன்ட விமர்சனத்த திரும்ப ஒருக்கா பிறிம்மா post செய்யுங்க, நாங்க அங்க போய் எங்கட விமர்சனத்த இடுவம். ஆப்ப செந்தூரன்ர நண்பர்களும் பார்க்கலாம் (தமிழ வேறுயாரும்தானே மொழிபெயர்ப்பீர்கள்.)

 
At 9:54 PM, Blogger raji said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:03 PM, Blogger raji said...

அன்பின் நிரூபா,
நான் இப்ப கூட ஒரு நல்லது செய்ததாகவே உணர்கிறேன். ஏன் என்றால் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே காட்டீ குழந்தைகளை வளர்த்தல் என்பதில் எனக்கு உடண்பாடு கிடையாது. ஏனெனில் பிள்ளை வளர்ந்து தவறான பக்கங்களை காணும்போது வரும் அதிர்ச்சி மனதைப் பாதிக்கும் என்பதை விட. அதிர்ச்சியிலிருந் மீழ்வதற்குள் வயது கடந்து விடும். இந்த பாதிப்புக்கு என்வாழ்வே உதாரணம். செந்தூரனுக்கு நடந்த விடயத்தின் சாராம்சத்தை வரிசைக்கிரமமாக அவருக்கு விளங்கும் முறையில் விளக்குங்கள். நிட்சயமாக புரிந்துகொள்ளும் அறிவு அவனிடம் உண்டு என்பது அவனது மன்மதன் பட விமர்சனத்தில் இருந்து விளக்குகிறது. ஆகவே அவனுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டியது (தெரிந்து கொள்ள வைக்க வேண்டியது) உலக அனுபவம். சந்திக்கும் மனிதர்களின் தன்மைகள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக விமர்சனங்களில் நேர்மறை மட்டுமே இல்லை எதிர்மறையும் உண்டு என்கிற யாதார்தத்தை. அதை எதிர் கொள்ளும் பக்குவத்தைத்தான். அதற்கு நடந்து முடிந்தது ஓர் நல்ல சந்தர்பம். அதை விடுத்து சிறுவன் என்பதற்காக “செந்தூரன் நல்லா எழுதினீங்கள்” என்று 15 பேர் வந்து எழுதிவிட்டு சென்றிருந்தால் செந்தூரனே சிறிது காலத்தில் மன்மதன் விமர்சனத்தை மறந்து போயிருப்பார். இப்போது இதல் சம்மந்தப்பட்ட அனைவரும் மற்றும் எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் மற்றும் மொத்தமாக இத்தனை நாட்கள் எல்லாமே செந்தூரனின் வெற்றி என உணரச் சொல்லிக் கொடுங்கள்.

 
At 1:57 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

முதலில் செந்தூரனுக்கு எனது வணக்கங்கள்.எப்போதும் தன்னையும் தனது அனுபவங்களையும் முன்னிறுத்தும் சமுதாயத்திற்கு கருத்துகளை வளர்ப்பதை விட திணிப்பதே வழைமையான செயல்.
நிரூபா நீங்கள் சுட்டிக் காட்டிய பின்னரே குற்ற உணர்ச்சி மேலிடுகிறது.நான் பெரியவர்களுக்கு கருத்தெதுவும் சொல்லவில்லை ஆனாலும் செந்தூரனுக்கும் எதுவும் சொல்லவில்லை அதுவே வருத்தமாக உள்ளது.

செந்தூரன் தனியாக வலைப்பதிவு ஆரம்பியுங்கள்.நிறையக் கேள்வி கேளுங்கள்.

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Website Counter
Website Counters