Tuesday, February 22, 2005

சிறுவர்கள் சிறுமியர்களை ஏமாற்றும் திரைப்படம்

மன்மதன்

"LITTLE SUPER STAR" சிம்புவால் நடிக்கப்பட்ட படம் என்று கூறி திரைவிமர்சனம் காட்டப்பட்ட பின் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் அந்தப்படத்தைக் கண்டுவிட்டு அந்தப் படம் கடையில் வந்தவுடன் வாங்கி கண்கொள்ளாக் காட்சிபோல் பார்த்துக்கொண்டுடிருப்பார்கள். அவர்களுக்கு அந்தப் படத்தின் அர்த்தம் இன்னும் விளங்கவில்லை. அது ஒரு சுப்பர் படம் என்று நினைப்பார்கள். நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். என்னோடு கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்கள் சில பேர் அந்தப் படத்தை விரும்பவில்லைத்தான். ஆனால் எனக்குத் தெரிந்த பலர் அந்தப் படத்தை விரும்பினார்கள். விரும்பிப் பார்த்தார்கள். பல பெரியவர்கள் கூறினார்கள். "மன்மதன் தப்பு செய்த பொம்பளைகளைத் தானே கொல்லுகிறான். அவன் அவர்களைக் கொல்லுவதில் தப்பில்லை. கொல்லட்டுமே." என்று. அதற்குப்பின் தான் நான் அப்படத்தை வாங்கிப் பார்த்தேன். அந்தப்படம் ஒரு சராசரிப்படமாகவே எனக்கும் தோன்றியது. ஆனால் விசயம் வேறுவிதமாகப் போய்விட்டது. என் அப்பா அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு "எப்படி ஒரு மோசமான படம் எடுத்திருக்கின்றார்கள்." என்று எனக்கு விளங்கப்படுத்தினார். அதன் பின்னர் தான் எனக்கு புரிந்தது. அதற்குபின் தான் நான் ஒரு விமர்சனமாக மன்மதன் பற்றி எழுதினேன். அந்தப் படத்தைப்பற்றி நிருபாவிடமும் கதைத்து நிருபாவின் உதவிமூலம் தான் நான் புளொக்கில் போட்டேன். ஒன்று மட்டும் உறுதியாக இருக்கின்றது. மன்மதன் என்னும் படம் சிம்பு நடிக்காமலிருந்தால் இந்தப் படத்தை ஒரு நாயும் விரும்பிப் பார்த்திருக்க மாட்டாது.

-செந்தூரன்
21.02.2005


பி.கு.
இது செந்தூரன் தமிழிலேயே எழுதியது. முதல் தான் எழுதிய விடயத்திற்கு மற்றவர்களால் எழுதப்பட்ட கருத்துக்களை தான் வாசித்ததென்றும் படிப்பு விடயங்களில் தான் கவனம் செலுத்தவேண்டியிருப்பதால் நேரமில்லையென்றும் நேரம் கிடைக்கிறபோது அவர்களுக்கு எழுதுவதாகவும் செந்தூரன் சொல்கிறார்.

4 Comments:

At 7:32 AM, Blogger கறுப்பி said...

செந்தூரனுக்கு

நான் சொல்ல வருவதில் உங்களுக்கு எவ்வளவு விளங்கப்போகிறது என்பது தெரியவில்லை. இருந்தும் எழுதுகின்றேன். தமிழ் திரைப்படங்களின் கொப்பியை எடுத்து வீட்டில் ஒருமுறை பார்க்கும் போது அல்லது திரையரங்குகளில் ஒருமுறை பார்க்கும் போது அதிகமாக சிறுவர்கள் மேலோட்டமாக பாடல் காட்சிகள் நகைச்சுவைக் காட்சிகள் சண்டைக்காட்சிகள் என்று பார்த்துவிட்டுப் போய் விடுவார்கள் (தமிழ் படங்களில் அதைத் தவிர பெரிதாக ஒன்றும் இல்லாததால்).
மன்மதனில் சொல்லும் கரு என்று நீங்கள் குறிப்பிட்டது – அதாவது தவறுசெய்யும் பெண்களைத் தானே “மன்மதன்” கொல்லுகின்றான் என்று பெரியவர்கள் தமது குழந்தைகளுக்குச் சொல்லும் போது அங்குதான் அவர்கள் பெரிய தவறையே விடுகின்றார்கள். ஒன்று தமது குழந்தைகளுக்குத் “தவறுசெய்யும் பெண்கள்” என்ற ஒன்றையும் “தவறு செய்பவர்களைக் கொல்லலாம்” என்ற ஒன்றையும் கற்றுக்கொடுக்கின்றார்கள். (தாங்கள் கூட இதைக் கண்டு கொள்ளவில்லை தங்கள் தந்தை கூறும் வரை என்று நான் நம்புகின்றேன). இந்த விடையத்தில் தாங்கள் தெளிவாக இருந்தால் போதும். எமது பெரியவர்களைவிட சிறுவர்கள் நிச்சமாகத் தெளிவானவர்கள் என்பது என் நம்பிக்கை.

 
At 7:41 AM, Blogger மாயவரத்தான்... said...

//மன்மதன் என்னும் படம் சிம்பு நடிக்காமலிருந்தால் இந்தப் படத்தை ஒரு நாயும் விரும்பிப் பார்த்திருக்க மாட்டாது//

பரவாயில்லையே...எங்க ஊரு 'வாரிசு'க்கு இப்படி ரசிகர்களா..? அது சரி.. படம் பார்த்தவர்களை நாய்ன்னு சொல்றீங்களா...? பார்க்காதவங்களை நாய்ன்னு சொல்றீங்களா?

 
At 8:57 AM, Blogger Narain said...

அடிப்படையிலேயே ஒரு தவறான கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட படமது. தான் காதலிக்கும் பெண் இன்னொருவனுடன் இருத்தல் என்பதைப் பார்த்து, கொலை செய்வது என்கிற எண்ணத்தில் எடுக்கப்பட்ட படம். ஒரு பெண்ணின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குவதிலிருந்து, பெண்களின் மேல் சுமத்தப்படும் கண்ணுக்கு தெரியாத வன்முறை இது.

"நான் உன்னை காதலிக்கிறேன். அதனால், நீ என்னை காதலிக்க வேண்டும். நீ வேறு எவரையும் நினைக்கக்கூடாது. பழகக்கூடாது. நான் உன்னை காதலிப்பதால், நீயும் என்னை காதலிக்கும் கடமை உடையவளாகிறாய். அவ்வாறு செய்யும்போது, நீ 'பரிசுத்தமாக' இருத்தல் அவசியம்" என நீளும் கதைக்களத்தில் கொலை செய்யப்படுவது, அல்லது கெட்ட பெண்கள் என வகைப்படுத்துவதை தாண்டி, காதலின் மூலம் கருவறுக்கப்படும் பெண்ணின் சுதந்திரமும், காதலின் ஊடே ஆண் முன்வைக்கும் வன்முறையையும் திகட்ட, திகட்ட சொன்ன படம்.

போய் ஏதாவது நல்ல படம் பார்த்து, பரிகாரம் தேடிக்குங்க.

 
At 5:01 AM, Blogger சித்ரவேல் - சித்திரன் said...

லேட்டா படிச்சாலும் சரியானத தான் படிச்சுருக்கேனுங்க...

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Website Counter
Website Counters