Thursday, March 24, 2005

சிறுவர்களின் கற்பனை

சிறுவர்களுக்குக் கற்பனை தேவை. ஸ்பைடமான் போன்ற கற்பனைப் படங்களைப் பார்த்துவிட்டு அதைப்போன்று இருக்கவேண்டுமென்ற கற்பனை சிறுவர் வாழ்க்கைக்கு ஆபத்தானது.
இந்தியாவில் சக்தி மன்(man) என்ற சிறுவர்களுக்கான கற்பனை நாடகத் தொடரை பல சிறுவர்கள் பார்த்துவிட்டு சக்திமன் அவர்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் தமது கைகளை பின்னுக்குக் கட்டுடிவிட்டு கிணற்றிற்குள் பாய்ந்தார்கள். சக்திமன் தன்னை காப்பாற்றுவார் என்று கூறி ஒரு பாலன் தன் அறையைப் ப10ட்டிவிட்டு நெருப்பைக் கொழுத்தி இறந்தான்.
இந்தக் கற்பனையால் பல சிறுவர்கள் தமது உயிரைக் கொடுத்தார்கள். உயிரப்பலி கொடுத்த சிறுவர்கள் தம் பிள்ளைகளுக்காக உயிரையே கொடுக்க உள்ள பெற்றோர்கள் அல்லது தமது குடும்பத்தவர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைக்காமல் தம் பிஞ்சு உயிரை ஒரு அர்ப்பமான கற்பனை தொடர் நாடகத்திற்குத் தொலைத்துள்ளார்கள்.

இதே மாதிரிக் காட்சிகளை தடுப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் எப்படி அந்தப் படம் இயற்றப்பட்டுள்ளது என்று. அவர்களுக்குக் அந்தப் படத்தைப்பற்றிக் பெற்றோர்கள் தமது அபிப்பிராயங்களைக் கூறவேண்டும். சிறுவர்களுக்கு சுப்பர்மன்போல் கற்பனை வந்தால் கதையாக எழுதினால் அல்லது படமான வரைந்தால் அவர்களின் சிந்தனை தெளிவாக இருக்கும். ஒரு சிறுவன் ஒரு கற்பனைப் படத்தினைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் அதைப் படமாக வரைந்து இப்படி ஒரு மனிதன் பறக்கமுடியுமா அல்லது தன் சக்தியோடு ஒரு வெடிகுண்டை அமைத்து எறிய முடியுமா என்று யோசிக்க வேண்டும்.

சிறுர்கள் இதைப்பற்றியே யோசித்தக்கொண்டு வேறு எதுவுமே செய்யமுடியாமல் இருந்தால் அவர்களின் நீண்ட வாழ்வைக் கெடுத்துவிடும்.

சிறுவர்கள் இந்தக் கற்பனை காரணமாக இயற்கையை மறப்பார்கள். இந்தக் கற்பனையால் சிறுவர்கள் தாம் தான் வலிமையானவர்கள் என்று நினைத்தல் அவர்கள் மனதிற்குள் வன்முறையை பெருக்கவைக்கும்.

நானும் இதுபோன்றுதான் நிறையக் கற்பனைப் படங்கள்ää தொடர்கள் பார்த்தேன். அந்தக் கற்பனையிலிருந்து விடுபட மிக கடினமாக இருந்தது. இப்போதும் நான் அந்தக் கற்பனையை விட்டு விடுபடவில்லை. என்றாலும் அதைப்பற்றி அவ்வளவு நினைப்பதில்லை. முதல் கற்பனையால் என்னுள் இருந்த பாதிப்பு இன்னும் என் உள்ளத்துள் அமைந்துள்ளது. பள்ளிக்கூடத்திற்குச் சென்றால் அந்தக் கற்பனை திடீரென்று தோன்றும். அதன் பின் எனக்குப் படிக்க விருப்பமில்லை ஆசிரியர் சொல்வது எல்லாம் என் மனதிற்குள் பதியாமல் ஒரு காதுள் போய் மறுகாதால் வெளியே வருவது அதிகம். ஆனால் நான் வெளியே சென்று விளையாடும்போது அந்தக் கற்பனைகள் வருவதில்லை.

வெளியே சென்று இயற்கையோடு கலந்து சிறுவர்களோடு பேசிப் பழகி விளையாடும்போது அந்தக் கற்பனை நினைவில் வராது மனம் தெளிவாக இருக்கும். ஆனாபடியால் வீட்டில் இருந்து தொலைக்காட்சி பார்த்துத் தம் மனதோடு பேசிக்கொண்டு தம் கற்பனையை வளர்ப்பதிலும்விட வெளியே சென்று இயற்கையை ரசித்து சிறுவர்களோட விiயாடுவது மனதை இலகுவாக்கும்.

பொதுவாக கற்பனை மனிதர்களுக்கு சிறந்தது. ஆனால் இந்தக் கற்பனையை எங்கே பயன்படுத்தவேண்டுமென்று தெரியாமல் பயன்படுத்தினால் அந்தக் கற்பனை ஒரு மனிதனைப் பாதாளத்தில் தள்ளும்.


செந்தூரன் -ஜேர்மனி
24.03.2005

7 Comments:

At 3:08 PM, Blogger ஒரு பொடிச்சி said...

நல்ல கட்டுரை செந்தூரன்!
தொடர்ந்து எழுதுங்கள்.
ஐரோப்பாவிலும் சிறுவர்கள் 50cent போன்ற அமெரிக்க பாடகர்களால் கவரப்படுவதுபற்றி நண்பி ஒருவர் சொன்னார். இதைப்பற்றி, -உங்களுக்கும் அந்த மாரிப் பாதிப்புகள் இருந்தா - நேரங்கிடைக்கும்போது எழுதுங்கள்.

 
At 7:15 PM, Blogger raji said...

செந்தூரன் நீங்கள் நன்றாகவே சிந்திக்கிறீர்கள். தொடர்ந்து சிந்தியுங்கள். எழுதுங்கள். நிருபாவிடம் ஒரு கேள்வி. செந்தூரன் நல்ல நல்ல சொற்களை பாவிக்கிறார். இயற்கையாகவே அவரிடம் நல்ல சொல்வளம் இருக்கிறதா? அல்லது நீங்கள் அவர்மீது சொற்களைத் திணிக்கிறீர்களா.

 
At 5:50 AM, Blogger டிசே தமிழன் said...

செந்தூரன் நன்றாக எழுதியுள்ளீர்க்கள்.
//வெளியே சென்று இயற்கையோடு கலந்து சிறுவர்களோடு பேசிப் பழகி விளையாடும்போது அந்தக் கற்பனை நினைவில் வராது மனம் தெளிவாக இருக்கும்.//
சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள். அத்தோடு இயலுமாயின் உங்கள் சிந்தனைகளை உங்கள் வயதொத்த நண்பர்களுடன் பகிர்ந்து விவாதியுங்கள். நிச்சயம் நம்மைப்போன்றவர்கள் சிறுவர்களுடன் கதைப்பதைவிட உங்களைப்போன்றவர்கள் கதைக்கும்போது பொறுமையாக இருந்து கேட்பார்கள். தொடர்ந்து எழுதுங்கள். தமிழில் எழுதுவது கடினமென்று தெரிந்தாலும் எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். டொச்சிலாவது எழுதுங்கள். நன்றி.

 
At 10:46 AM, Anonymous veetha said...

செந்தூரன்!

உங்களுடைய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த வயதில் இவ்வளவு திறமை இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் இதேபோல் பல கட்டுரைகள் கதைகள் எழுதி ஒரு எழுத்தாளனாக வர வாழ்த்துகிறேன்.

வேதா-காகன்-ஜேர்மனி

 
At 11:01 AM, Blogger நிருபா said...

This comment has been removed by a blog administrator.

 
At 11:05 AM, Blogger நிருபா said...

செந்தூரனின் சொற் தெரிவுகள் வசனங்கள் எனக்கும் ஆச்சரியத்தையே தருகிறது. அவரிடம் நிறைய எழுத்துத் திறமை இருக்கிறது. ஐரோப்பாவில் வாழும் ஒரு பிள்ளை 50 cent ருடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என்று ஆதங்கமாக உள்ளது. அவரது வசனங்களை கணணியில் பதிவதற்கு அவரது தாயோ அல்லது நானோ உதவுகிறோம். சில வசனங்களை அமைப்பதற்கு சில வேளைகளில் உதவுகிறோம். சில வேளைகளின் எமது பரிந்துரைகளைக்கூட அவர் ஏற்பதில்லை. சொற் பிரயோகங்களும் சிந்தனைகளும் முழுக்க முழுக்க அவரதுதான். சில சொற்கள் திரும்பத்திரும்ப வந்தால் ஒத்தகருத்துள்ள சொற்கள் உண்டா என்று கேட்கிறார். எமக்கு சிலவேளைகளில் ஞாபகம் வராவிட்டால் தானே உடனே ஞாபகப்படுத்தி எழுதுகிறார். அல்லது அவர் சொல்லச் சொல்ல நாம் கணணியில் பதிகிறோம்.

 
At 3:34 PM, Blogger U.P.Tharsan said...

காலம் கடந்து பார்த்தாலும் மிக அருமையான கட்டுரையை பார்த்த மனத்திருப்தி கிடைத்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Website Counter
Website Counters